மொறு மொறு பேரிச்சம்பழம் ஸ்வீட் ரெசிபி

Crispy Dates Sweet Recipe

சுவையான பேரிச்சம்பழம் ஸ்வீட் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம் - 10 (கொட்டை நீக்கியது)

பாதாம் - 10

சோள மாவு - அரை கப்

பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில், பேரிச்சம்பழங்களை கொட்டை நீக்கி வைக்கவும்.

ஒவ்வொரு பேரிச்சம்பழத்தின் நடுவிலும் ஒரு பாதாம் வைத்து மூடிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் சோள மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில் பிரெட் கிரம்சை தயாராக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு பேரிச்சம் பழத்தை எடுத்து சோள மாவில் முக்கியப் பிறகு பிரெட் கிரம்சில் பிரட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான மொறு மொறு பேரிச்சம்பழம் ஸ்வீட் ரெடி..!

சுவையான அவல் பால் பாயாசம் ரெசிபி

You'r reading மொறு மொறு பேரிச்சம்பழம் ஸ்வீட் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான கோதுமை குலாப் ஜாமூன் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்