ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சட்னி ரெசிபி

Andra Special Gongura Chutney Recipe

சுவையான கோங்குரா சட்னி அதாவது புளிச்சைக் கீரை சட்னி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

புளிச்சைக் கீரை - ஒரு கட்டு

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

வெந்தயம் - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு துண்டு

வெல்லம் - அரை டீஸ்பூன்

வர மிளகாய் - 15

எண்ணெய்

நெய்

உப்பு

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து பொரித்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்ததாக, வர மிளகாய் வறுத்து ஜாரில் சேர்க்கவும். இத்துடன் உப்பு கொஞ்சம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

மீண்டும் புளி கரைசலை ஊற்றி அரைத்துக்கவும்.

அதே வாணலியில் நெய்விட்டு உருகியதும், புளிச்சை கீரையை சேர்த்து நன்றாக சுருங்கும் வரை வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.

இந்நிலையில், மிக்ஸி ஜாரில் உள்ள மசாலாவுடன், வெல்லம், வதக்கிய கீரையை சேர்த்து ஒன்றும் பாதியாக அரைத்துக் கொள்ளவும்.

சுவையான கோங்குரா சட்னி ரெடி..!

You'r reading ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சட்னி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் - நாளை தீர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்