சூப்பர் டிஷ் பருப்பு மசாலா கிரேவி ரெசிபி

Super Dish Dal Masala Gravy Recipe

சுவையான பருப்பு மசாலா கிரேவி ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

தக்காளி - 2

துவரம் பருப்பு - 1/4 கப்

பாசிப் பருப்பு - 1/4 கப்

மைசூர் பருப்பு - 1/2 கப்

மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - அரை டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

இஞ்சி - 1 ஸ்பூன்

பூண்டு 1 ஸ்பூன்

சிகப்பு மிளகாய் தூள் - 2

கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

கறிவேப்பிலை

நெய் - 2 டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை

முதலில், துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து சுமார் 5 விசில்விட்டு வேகவிடவும்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் எண்ணெய்விட்டு சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

கூடவே, சிகப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கஸ்தூரி மேத்தி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர், மசித்து வைத்த பருப்பு, ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து சுமார் 15 நிமிடங்களுக்கு வேகவிடவும்.

இறுதியாக, கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான பருப்பு மசாலா கிரேவி ரெசிபி ரெடி..!

You'r reading சூப்பர் டிஷ் பருப்பு மசாலா கிரேவி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'கல்விக்கொள்கை குறித்த கருத்து' - ஆதரவு குரல் கொடுத்த கமலுக்கு நடிகர் சூர்யா நன்றி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்