கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் ரெசிபி

Karnataka Special Bonda Soup Recipe

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பாசிப் பருப்பு - முக்கால் கப்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தக்காளி - 2

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 4

தேங்காய் துண்டு - 3

கஸ்தூரி மேத்தி பவுடர் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, அத்துடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும்.

வாணலியை நெய்விட்டு உருகியதும் கடுகு போட்டு பொரிக்கவும். அத்துடன், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்து பருப்பு கலவையில் சேர்த்துக் கலக்கவும்.

கூடவே, கஸ்தூரி மேத்தி பவுடர், உப்பு. கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் பருப்பு சூப் ரெடி.

பிறகு, உளுத்தம் பருப்பை தண்ணீர் ஊற்றி சுமார் 5 மணி நேரம் ஊறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.

அத்துடன், பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து மெது வடை மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில்விட்டு வேகவிட்டு எடுத்தால் போண்டா தயார்.

பிரிமாறும்போது, ஒரு கிண்ணத்தில் 2 அல்லது 3 போண்டா போட்டு அதில் சூப் கலவையை ஊற்றி சுடச்சுட சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.

You'r reading கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேலூர் மக்களவை தேர்தல்; இழுபறிக்குப் பின் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்