குழந்தைகளுக்குப் பிடித்த வாழைப்பழ கேக் ரெசிபி

Kids Favourite Banana Cake Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழ வெண்ணிலா கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பெரிய வாழைப்பழம் - 2

மைதா மாவு - ஒரு கப்

வெண்ணெய் - 50 கிராம்

முட்டை - ஒன்று

சர்க்கரை - 100 கிராம்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

உப்பு

செய்முறை:

முதலில், வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

அத்துடன், வெண்ணெய், முட்டை, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

கூடவே, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வெண்ணிலா எசன்ஸ், உப்பு சேர்த்து மீண்டும் கலந்துக் கொள்ளவும்.

இறுதியாக மைதா மாவு சேர்த்துக் கிளறினால் கேக் செய்வதற்கான மாவு தயார்.
தற்போது, இந்த கலவையை கேக் பேனில் வெண்ணெய்த் தடவி அதன் மீது பட்டர் பேப்பர் வைத்து ஊற்றி சமம் செய்யவும்.

ஓவனை சூடு செய்தப்பிறகு, 375 டிகிரி Fல் உள்ளே வைத்து 40 நிவீடங்களுக்கு வேக விடவும்.

சுவையான வாழைப்பழ வெண்ணிலா கேக் ரெடி..!

You'r reading குழந்தைகளுக்குப் பிடித்த வாழைப்பழ கேக் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானார் டி.ராஜா எம்.பி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்