ஆடி மாத ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் ரெசிபி

Adi Month Special Coconut Payasam Recipe

ஆடி மாதத்தில் அம்மனுக்கு படைக்கக்கூடிய பிரசாதங்களில் ஒன்றான தேங்காய் பாயாசம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பச்சைரிசி - 3

தேங்காய் - ஒரு கப்

வெல்லம் - ஒரு கப்

ஏலக்காய் - 3

முந்திரி - 10

திராட்சை - 10

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் பச்சரியை சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, பச்சரிசி, தேங்காய் துண்டு, ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லம் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய்விட்டு உருகியதும் முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரைத்து வைத்த மாவு சேர்த்து மிதமான சூட்டில் வேகவிடவும்.

பிறகு, வெல்லக் கரைசல் சேர்த்து கலக்கவும். கலவை கெட்டியானதும் வறுத்து வைத்து முந்திரி திராட்சை «ச்த்து கலந்து சுடச்சுட பரிமாறவும்.

சுவையான அரிசி தேங்காய் பாயாசம் ரெடி..!

You'r reading ஆடி மாத ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மும்பையில் 10 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ ; ராட்சத ஏணி உதவியால் 100 பேர் மீட்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்