சத்தான பீட்ரூட் தோசை ரெசிபி

Healthy Beetroot Dosa Recipe

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தோசை செய்துக் கொடுங்க.. சரி பீட்ரூட் தோசை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் (சீவியது) - ஒரு கப்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

பூண்டு - 5

கறிவேப்பிலை

நல்லெண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் தோசை மாவை தயாராக வைக்கவும்.

மிக்ஸி ஜாரில், பூண்டு, மிளகாய்த்தூள், நறுக்கி வைத்த பீட்ரூட் 5 கரண்டி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.

இதனை தோசை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தவாவை அடுப்பில் வைத்து, சூடானதும் தோசை வார்த்து அதன்மீது நல்லெண்ணெய்விட்டு சுட்டெடுத்தால் சுவையான பீட்ரூட் தோசை ரெடி..!

You'r reading சத்தான பீட்ரூட் தோசை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுவையான ப்ரக்கோலி கிரேவி மசாலா ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்