வீட்டில் டிரை பண்ணுங்க.. அத்தோ - பர்மீஸ் உணவு வகை ரெசிபி

Tasty Atho Burmese Food recipe

வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய அத்தோ எனுமு பர்மீஸ் உணவு வகை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 200 கிராம்

பூண்டு - 10

பெரிய வெங்காயம் - 2

முட்டைக்கோஸ் - ஒரு கப்

கேரட் - ஒரு கப்

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

புளி கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன்

கேசரி பவுடர் - ஒரு சிட்டகை

காய்ந்த மிளகாய் துகள் - தேவையான அளவு

தட்டை - 2

கொத்தமல்லித்தழை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிடவும். வெந்ததும் அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு வறுத்து தனியாக வைக்கவும். அதேபோல் வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், :எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் துகள், உப்பு, உடைத்த தட்டு வடை, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.

சுவையான அத்தோ ரெடி..!

You'r reading வீட்டில் டிரை பண்ணுங்க.. அத்தோ - பர்மீஸ் உணவு வகை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிக்கன் பிரியர்களுக்கு பிடித்த டிராகன் சிக்கன் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்