குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பன் ரெசிபி

Yummy Coconut Bun Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான அளவு:

மைதா மாவு - கால் கிலோ

ஈஸ்ட் - 2 டீஸ்பூன்

சர்க்கரை - ஒரு கப்

தேங்காய்த்துருவல் - 2 கப்

ஏலக்காய் - 2

டூட்டி ப்ரூட்டி - கால் கப்

பால் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் விடவும்.

மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவு, எண்ணெய், உப்பு சேர்த்து கலந்து, ஈஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும்.

இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் தேங்காய்த்துருவல், அரை கப் சர்க்கரை, ஏலக்காய், டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

பின்னர் இரண்டு மடங்கு பெரியதாக ஆன மாவை இரண்டு சிறிய மற்றும் பெரிய பங்காக பிரித்துக் கொள்ளவும்.

பிறகு, பேக்கிங் ஷீட் மீது சிறிய உருண்டையை வைத்து பெரியதாக விரித்து அதன் மீது தேங்காய் கலவை வைத்து மீண்டும் அதன் மீது விரித்த மாவை வைத்து ஓரங்களில் அழுத்திவிடவும். அதன்மீது பாலை தொட்டு தடவவும்.

ஓவனை 150 டிகிரி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்து இதனை வைத்து சுமார் 25 முதல் 30 நிவீடங்களுக்கு வேக வைத்து எடுத்து வி வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

சுவையான தேங்காய் பன் ரெடி..!

You'r reading குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பன் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உங்கள் குழந்தைக்கு பாலூட்டுகிறீர்களா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்