யம்மி.. ஓரியோ சீஸ் கேக் ரெசிபி

Delicious Oreo Cheese Cake Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஓரியோ சீஸ் கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ஓரியோ பிஸ்கட் - 20

வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

க்ரீம் சீஸ் - 500 கிராம்

ஹெவி க்ரீம் - 500 கிராம்

வெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

சர்க்கரை - அரை கப்

செய்முறை:

முதலில் ஓரியோ பிஸ்கட்டை நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்.

பின்னர், அதில் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி கேக் பேனில் போட்டு சமம் செய்து அழுத்தி பிரிட்ஜ்ஜில் பத்து நிமிடங்கள் வைக்கவும்.

தொடர்ந்து, ஒரு கிண்ணத்தில் க்ரீம் சீஸ் போட்டு மென்மையாகும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அத்துடன், ஹெவி க்ரீம், வெண்ணிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும்.

அதில், ஓரியோ பிஸ்கட்களை ஒன்றும் பாதியாக உடைத்து கலந்து பேனில் சேர்த்து சமம் செய்யவும்.

அதன் மீது ஓரியோ பிஸ்கட்களை மீண்டும் உடைத்து போட்டு, சுமார் 3 முதல் 4 மணி நேரத்திற்கு பிரிட்ஜ்ஜில் வைத்து எடுக்கவும்.

குழந்தைகளுக்கு கேக் வடிவில் வெட்டி துண்டுகள் போட்டு பரிமாறி அசத்தவும்..

ஓவனே இல்லாமல் யம்மி சீஸ் கேக் ரெடி..!

You'r reading யம்மி.. ஓரியோ சீஸ் கேக் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமைச்சர் மணிகண்டன் நீக்கம்; உதயகுமாரிடம் கூடுதல் பொறுப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்