ஸ்பைசி ஓட்ஸ் உருண்டை மஞ்சூரியன் ரெசிபி

Spicy Oats Balls Manchurian Recipe

அசத்தலான சுவையில் ஓட்ஸ் உருண்டை மஞ்சூரியன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 150 கிராம்

வெங்காயம் - 2

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 10

பச்சை மிளகாய் - 2

குடை மிளகாய் - 1

கேரட் - கால் கப்

கோஸ் - கால் கப்

மிளகு - ஒரு டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடைமிளகாய், கேரட், கோஸ், மிளகுத்தூள், உப்பு, சிறுது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைப் பிடித்து தனியாக வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகள் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.

பிறகு, பொரித்த உருண்டைகளை அதில் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

சுவையான ஓட்ஸ் உருண்டை மஞ்சூரியன் ரெடி..!

You'r reading ஸ்பைசி ஓட்ஸ் உருண்டை மஞ்சூரியன் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யம்மி.. ஓரியோ சீஸ் கேக் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்