சுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி

Yummy Sago Laddu Recipe

மிகவும் சுலபமா செய்யக்கூடிய ஜவ்வரிசி லட்டு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 100 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

முந்திரி - 200 கிராம்

நெய்

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை தண்ணீரில் சுமார் 8 மணி நேரம் ஊறவிடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சுமார் 5 நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருந்தால் வெந்து உதிரியாக மாறும்.

பின்னர், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.
அத்துடன், தண்ணீரில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி விடவும். அவ்வபோது நெய் சேர்க்கவும்.

ஜவ்வரிசி நன்றாக வெந்து வாணலியில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் பொடித்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

சூடு ஓரளவுக்கு தணிந்ததும், கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருண்டைகள் செய்து வைக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான ஜவ்வரிசி லட்டு ரெடி..!

You'r reading சுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமகமக்கும் சூப்பரான செட்டிநாடு நண்டு குழம்பு ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்