குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி

Yummy Chocolate Paniyaram Recipe

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சாக்லேட் பணியாரம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

முட்டை - 1

காய்ச்சிய பால் - ஒரு கப்

உருக்கிய வெண்ணெய் - கால் கப்

வெண்ணிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்

மைதா மாவு - ஒரு கப்

கோகோ பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்

பொடித்த சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் &-2 டீஸ்பூன்

சாக்லேட் சிப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அத்துடன், பால், வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில் மைதா, கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிறகு, முட்டை கலவையுடன் மைதா மாவு கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்துக் கொள்ளவும்.

இறுதியாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

பின்னர், பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடாக்கவும்.

பிறகு, ஒவ்வொரு கரண்டி சாக்லேட் மாவு எடுத்து அதில் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.

அட்டகாசமான சுவையில் சாக்லேட் பணியாரம் ரெடி..!

சத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி

You'r reading குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த சதியா? இ-மெயில் மிரட்டல் வெறும் புரளி - பிசிசிஐ தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்