ஆஹா..செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு

ஆஹா.. என்ன ருசி.. நீங்களும் உங்க வீட்டுல ட்ரை பண்ணுங்க செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு. ரெசிபியை.. இப்போ குழம்பிற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை குறித்து பார்ப்போமா..

தேவையான பொருட்கள்

நண்டுஅரை கிலோ

சின்ன வெங்காயம்20

மிளகாய் தூள்1 டேபிள் ஸ்பு+ன்

பட்டை2

பூண்டு பல்8

கத்தாpக்காய்2

தேங்காய் துருவல்அரை கப்

சீரகம்1 டீஸ்பூன்

மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்

தக்காளி2

சோம்பு1 டீஸ்பு+ன்

வெந்தயம்அரை டீஸ்பு+ன்

கொத்தமல்லித் தழை1 கைப்பிடி

கறிவேப்பிலை1 கொத்து

உப்புதேவைக்கேற்ப

எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை

நண்டை கழுவி சுத்தம் செய்து, உப்பு போட்டு பத்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் வெங்காயம், கத்தரிக்காய், தக்காளி ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு அதனுடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்ததும் நண்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு சிவக்க வதக்கி குழம்பில் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லித் தழையை சேர்த்து பரிமாறவும்.

You'r reading ஆஹா..செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்