ருசியான மஷ்ரூம் புலாவ்..

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ருசியான மஷ்ரூம் புலாவ் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

சமைக்க தேவையானவை

 மஷ்ரூம் - 100 கிராம் ப.மிளகாய் - 4 புதினா - தேவையான அளவு வெங்காயம் - 3 தயிர் - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி – தேவையான அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 2 இஞ்சி, பூண்டு விழுது - 3ஸ்பூன் பாஸ்மதி அரிசி - 2 கப் நெய் - 2 ஸ்பூன்

உணவு செய்முறை

முதலில் வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்து அதனுடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், காளான் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தயிர் சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ந்னகு கிளரிநன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.பின்பு நன்கு கிளரி சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.

You'r reading ருசியான மஷ்ரூம் புலாவ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இதயத்துக்கு நன்மை தரும் செம்பருத்தி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்