அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் நூடுல்ஸ் சூப்!

Hot chicken noodles soup for non vegetarians

அசைவப் பிரியர்கள் விரும்பும் சிக்கன் நூடுல்ஸ் சூப் எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 250 கிராம்

வேக வைத்த நூடுல் - ஒரு கப்

பூண்டு - 5

வெங்காயம் - 2

உருளைக்கிழங்கு - 2

கேரட் - 2

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின், நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் சேர்க்கவும். தொடர்ந்து சிக்கன் துண்டுகள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி மூடி 4 அல்லது 5 விசில்விட்டு இறக்கவும். சிக்கன் சூப் தயார்.

சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வேக வைத்த நூடுல்ஸை அதுனுடன் சேர்த்து மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

சுடச்சுட சிக்கன் நூடுல்ஸ் சூப் ரெடி!

You'r reading அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் நூடுல்ஸ் சூப்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீடுகளில் புகுந்து பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற ஹரியானா ஐஜி கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்