ஸ்பைசி சில்லி சீஸ் டோஸ்ட் ரெசிபி

Spicy chilli cheese toast recipe

மாலை நேரத்தில் வித்தியாசமான ஸ்நாக் சாப்பிட ஆர்வமா இருக்கா..? அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க..

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 2

பூண்டு - 3

பச்சை மிளகாய் - 2

வெண்ணெய் - 3 மேசைக் கரண்டி

சீஸ் - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் துகள் - தேவையான அளவு

செய்முறை:

கிண்ணத்தில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு & பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிரெட் துண்டுகள் மீது வெண்ணெய் கலவையை முழுவதுமாக தடவவும். பின், சீஸ் துருவவும். அதன்மீது, காய்ந்த மிளகாய் துகள் தூவிவிடவும்.

ஒரு அகண்ட கடாயில் இந்த பிரெட் துண்டுகளை வைத்து மூடி டோஸ்ட் செய்யவும்.

சீஸ் கரைந்து பார்ப்பதற்கே வாய் ஊறும் ஸ்பைசி சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி!

You'r reading ஸ்பைசி சில்லி சீஸ் டோஸ்ட் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாஸ்டருக்கு கோடிகளில் வலைவிரிக்கும் பெரிய ஒடிடி தளங்கள்.. விஜய் முடிவு என்ன?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்