மொறு மொறு அவல் வடை செய்யலாமா ?

crispy aval vadai recipe

உடலுக்கு நன்மை தரும் அவல் கொண்டு வடை எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

அவல் ஒரு - கப்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

ரவை - ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் அவலை நன்றாக தண்ணீரில் அலசி 2 நிமிடங்கள் ஊற வைத்து பின் பிழிந்து தனியாக வைக்கவும்.

அத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரிசி மாவு, ரவை, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசையவும்.

பிறகு, கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அவல் கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து வடைப் போல் தட்டி சூடான எண்ணெய்யில்விட்டு பொரித்து எடுக்கவும்.

மொறு மொறு அவல் வடை தயார்!

You'r reading மொறு மொறு அவல் வடை செய்யலாமா ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பப்பாளி சாப்பிடுங்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்