பழமை மாறாமல் மண் பானையில் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி??வாங்க சமைக்கலாம்..

How to cook vegetable briyani using pot in tamil

நம் பாரம்பரிய உணவு என்றாலே மனதிற்குள் ஒரு சிறிய சந்தோஷம்.நம் முன்னோர்கள் அந்த காலத்தில் மண் பானைகளை கொண்டு தான் சமைத்தனர்.மண் பானையில் சமைக்கும் உணவு மிகுந்த சுவையாக இருக்கும்.இது போன்ற பாரம்பரியம் மாறாமல் மண் பானையில் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.


தேவையான பொருள்கள்:-

பாசுமதி அரிசி-1 கப்
வெங்காகயம் -1 கப்
பச்சை பீன்ஸ் -1 கப்
கேரட் -1 கப்
பட்டாணி -1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
தக்காளி சாறு-1 கப்
புதினா இலை-தேவையான அளவு
நெய்-4 ஸ்பூன்
தயிர்-1 கப்
மசாலா பொருள்கள் (பட்டை,கிராம்பு)-தேவையான அளவு
பெருங்காயம்-தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
மிளகாய் பொடி-தேவையான அளவு
சீரகம்-தேவையான அளவு
கரம் மசாலா தூள்-தேவையான அளவு
ஏலக்காய்-தேவையான அளவு
கொத்தமல்லி -தேவையான அளவு

செய்முறை:-

ஓரு பாத்திரத்தில் அரிசியை நன்கு அலசி 5-10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.


மண் பானையில் நெய் சேர்த்து அதில் மாசாலா பொருள்களான பட்டை,கிராம்பு, பெருங்காயம்,சீரகம்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


பிறகு அதில் நறுக்கிய காய்கறிகள் கேரட்,பச்சை பீன்ஸ்,பட்டாணி ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.


நன்கு வதக்கிய பிறகு தக்காளி சாறு,தேவையான அளவு உப்பு,ஊறவைத்த அரிசி, அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பானையை மூடி வேக வைக்கவும்.


ஓரு கிண்ணத்தில் சூடான நிலக்கரி துண்டை எடுத்து பானையின் மேல் வைக்க வேண்டும்.10 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.


10 நிமிடம் கழிந்தவுடன் மூடியை திறந்து நெய் கொஞ்சம் ஊற்றி கொத்தமல்லியால் அலங்கரித்தால் சுவையான பாரம்பரிய மிக்க வெஜிடபிள் பிரியாணி ரெடி.


மண் பானையில் சமைத்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

You'r reading பழமை மாறாமல் மண் பானையில் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி??வாங்க சமைக்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மனிதநேயத்தின் உச்சம்... நோயாளியை காப்பாற்ற ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய டாக்டர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்