கேரளா ஸ்டைல் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி??

how to make kerala style fish kulambu

கேரளா ஸ்டைல் உணவு என்றாலே மிகுந்த சுவையும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்கும்.கேரளா மக்கள் சிறு சிறு உணவை கூட ஆரோக்கியமாக செய்வார்கள். உதாரணம் அவர்கள் சமைக்கும் பொழுது ஆரோக்கியம் நிறைந்த தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவார்கள்.இப்படிபட்ட கேரளா மாநிலத்தில் எப்படி மீன் குழம்பு செய்வார்கள் என்பதை பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-

மீன்-120 கிராம்

கொத்தமல்லி விதைகள்-40 கிராம்

மிளகாய் வத்தல்-60 கிராம்

தேங்காய் எண்ணெய்-தேவையான அளவு

கடுகு -1 கிராம்

வெங்காயம்-2

கறிவேப்பிலை-சிறிது

தேங்காய் பால்-தேவையான அளவு

புளி கரைசல் -தேவையான அளவு

கொத்தமல்லி-சிறிதளவு

செய்முறை:-

முதலில் குழம்புக்கு மசாலா செய்ய மிளகாய் வத்தல்,கொத்தமல்லி விதைகள் போன்றவற்றை 3-4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஊற வைத்த பொருள்களை நன்கு வேக வைத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடானவுடன் அதில் கடுகு ,வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

கடாயில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.பச்சை வாசனை போனவுடன் குழம்பில் மீன் துண்டுகளை சேர்க்கவும்.

பிறகு தேங்காய் பால்,புளிகரைசல் ஆகியவற்றை சேர்த்து மிதமாக சூட்டில் கொதிக்க வைக்கவும்.

கடைசியில் கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அனைத்து விட வேண்டும்...

சுவையான,காரசாரமான மலபார் மீன் குழம்பு ரெடி...

You'r reading கேரளா ஸ்டைல் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மார்பகப் புற்று நோயை விரட்டி அடிக்கும் வேப்பங்கொழுந்து!!!இயற்கை மருத்துவம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்