கிராமத்து ஸ்டைலில் குளிர்ச்சியான மோர் செய்வது எப்படி??

how to do village style curd drink

தற்பொழுது இருக்கும் காலத்தில் வெயிலின் தாக்கம் பயங்கரமாக உள்ளதால் கொஞ்ச நேரம் வெளியே சென்றாலும் உடம்பில் உள்ள சக்தியெல்லாம் குறைந்து விடுகிறது. கிராமத்தில் உள்ள மக்கள் வெயில் காலத்தில் வெப்பத்தை விரட்ட குளிர்ச்சியான மோரை அருந்துவார்கள்.அம்மோரை குடிக்கும் போது வயிறு குளிர்ச்சியாக இருக்கும்.அந்த மோர் ரெசிப்பியை கிராமத்தில் எப்படி செய்வார்கள் என்பதை பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-

தயிர்-1கப்

தண்ணீர்-2 கப்

நறுக்கிய இஞ்சி-1 ஸ்பூன்

கருவேப்பிலை-5-7

கடுகு-1 ஸ்பூன்

பெருங்காயம்-தேவையான அளவு

மிளகு-2 ஸ்பூன்

சீரகத்தூள்-சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக கடைய வேண்டும்.பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி,பெருங்காயத்தூள்,மிளகு இதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்கிவிட வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,சீரகத்தூள் ஆகியவை சேர்த்து தாளித்து கொண்டு கடைந்த மோரில் ஊற்ற வேண்டும்.

சிறிது நேரம் மோரை பிரிட்ஜில் வைக்கவும்.ஒரு மணி நேரம் கழித்து குளு குளு மோரை பறிமாறுங்கள்..

கடைசியில் கொத்தமல்லி,பச்சை மிளகாய் தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.

குளிர்ச்சியான,ஆரோக்கியமான மோர் கிராமத்து ஸ்டைலில் ரெடி...

You'r reading கிராமத்து ஸ்டைலில் குளிர்ச்சியான மோர் செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எப்போது வேண்டுமானாலும் கொரோனா தாக்கலாம்.. ஷிகர் தவான் அதிர்ச்சி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்