அசைவ பிரியர்களுக்கான ஆட்டுத்தலை குழம்பு ரெசிபி

அசைவ பிரியர்களுக்கான ஆட்டுத்தலை குழம்பு ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

தேவையான பொருட்கள்

1. ஆட்டு தலை - ஒன்று 
2. எண்ணெய் - தேவைக்கேற்ப 
3. பட்டை - 2 
4. ஏலம் - 2 
5. கிராம்பு - 2 
6. வெங்காயம் - ஐந்து 
7. இஞ்சி பூண்டு விழுது - நான்கு டீஸ்பூன் 
8. கொத்தமல்லி, புதினா - 2 கைப்பிடி 
9. பச்சை மிள - காய் நான்கு 
10. மிளகாய் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன் 
11. தனியா தூள் மூன்று - டேபிள் ஸ்பூன் 
12. உப்பு - தேவைக்கேற்ப 
13. தக்காளி - நான்கு 
14. மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் 
15. தேங்காய் - அரை மூடி (அரைத்து பால் எடுத்து கொள்ளவும்)

செய்முறை

ஆட்டு தலை சுத்தம் செய்து வாங்கி வரவும். அதில் நிறைய நொறுக்கு எலும்பு இருக்கும். 

அதில் உள்ள நாக்கை தனியாக எடுத்து அதை கொதிக்கிற வெந்நீரில் போட்டு தோலை பிரித்தெடுக்கவும்.  ஆட்டு தலை நன்கு கழுவி எடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் வேகவைக்கவும். 

தனியாக எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொத்தமல்லி புதினா, பச்சை மிளகாய், தூள் வகைகள் அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும். 

பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு கிளறவும். தீயை ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும். கடைசியில் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விட்டு வெந்ததும் இறக்கவும். இந்த ரெசிபி உடம்புக்கு ரொம்ப நல்லது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அசைவ பிரியர்களுக்கான ஆட்டுத்தலை குழம்பு ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5 ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் திட்டம் தொடக்கம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்