அனைவருக்கும் பிடித்த ரவா லட்டு ரெசிபி

விழாக்காலங்களில் அனைவரது வீட்டிலும் எளிதில் செய்யக்கூடிய ரவா லட்டு ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

தேவையான பொருட்கள்

ரவை – 1 கப்

சக்கரை – 1 கப்

நெய் – 1/4 கப்

ஏலக்காய் – 1

முந்திரி – 8

செய்முறை

ஒரு அடி கனமான கடாயில், ரவையை நிறம் மாறாமல், மிதமான தீயில் வறுக்கவும். ஆறவைத்து மிக்சியில் நைசாக பொடிக்கவும். சல்லடையில் சலித்துவிடவும்.சக்கரையையும் ஏலக்காய் சேர்த்து நன்கு நைசாகப்  பொடிக்கவும். இரண்டையும் ஒரு கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.நெய் சூடு செய்து அதில் உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ரவா, சக்கரை கலவையில் சேர்த்து, கரண்டியில் கலக்கவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், நன்கு கலந்து, உருண்டைகளாக அழுத்திப் பிடிக்கவும். உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், கூடுதலாக ஓரிரு தேக்கரண்டி சூடான நெய் சேர்த்து பிடிக்கலாம். சுவையான ரவா லட்டு ரெடி..

குறிப்புகள்

மிக்சி சூடாகாமல் நிறுத்தி நிறுத்தி அரைக்கவும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அனைவருக்கும் பிடித்த ரவா லட்டு ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 400ஐ தொட்டு இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்