குழந்தைகளுக்கு பிடித்த சாக்கலேட் பாப்கார்ன் ரெசிபி..

பாப்கார்ன், சாக்லேட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான  பொருட்கள்:

பாப்கார்ன் சோளம் - ஒரு கப்,
குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம்,
வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - சிறிதளவு,

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத் தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது சாக்லேட் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும்.

உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் (அ) வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பாப் கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடி விடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும்.

பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும். நன்கு குலுக்கி சீராக பரவ விடவும். சூப்பரான சாக்லேட் பாப்கார்ன் ரெடி. இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குழந்தைகளுக்கு பிடித்த சாக்கலேட் பாப்கார்ன் ரெசிபி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாண வேடிக்கை காட்டிய சுனில் நரைன் - கொல்கத்தா அணி அபார த்ரில் வெற்றி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்