குழந்தைகள்nbspவிரும்பி சாப்பிடும் தயிர் மசாலா இட்லி சாட்..

இட்லி வைத்து சூப்பரான தயிர் மசாலா இட்லி சாட் செய்யலாம். குழந்தைகளுக்கு தயிர் மசாலா இட்லி சாட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

இட்லி - 10

தயிர் - 250 மி.லி

இஞ்சி - பச்சைமிளகாய் விழுது - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தாளிக்க :

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

அலங்கரிக்க :

கேரட் - 2

தேங்காய்த் துருவல் - சிறிதளவு

வெங்காயம் - 2

புதினா - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

முதலில் இட்லியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும். பின் கேரட்டை துருவிக்கொள்ளவும். பிறகு வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் அரைத்த இஞ்சி - பச்சைமிளகாய் விழுது, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அடுத்து தாளிக்க கொடுத்துள்ள கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து தயிர் கலவையில் கொட்டி கலந்து கொள்ளவும்.

பிறகு தட்டில் பொரித்த இட்லியை அடுக்கி வைத்து, அதன் மேல் தயிர் கலவையை ஊற்றி, அதன் மேல் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல், புதினா, கொத்தமல்லித்தழையைப் போட்டு அலங்கரித்து பரிமாறினால், சூப்பரான தயிர் மசாலா இட்லி சாட் தயார்...! 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குழந்தைகள்nbspவிரும்பி சாப்பிடும் தயிர் மசாலா இட்லி சாட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போல்ட், கெய்ல், ரஸ்ஸல் சக்ஸஸ் ரகசியம் என்ன..?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்