உடலுக்கு குளிர்ச்சியை தரும் கிவி ஆப்பிள் புதினா ஜூஸ்

அக்னி முடிந்தும் வெயில் சுட்டெரித்துக்கொண்டு இருக்கிறது.. இதுபோன்ற நேரங்களில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது தான் நல்லது.. அதனால், உடலுக்கு குளிர்ச்சியை தரும் கிவி ஆப்பிள் புதினா ஜூஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் .. 

தேவையான பொருட்கள்:

கிவி - 1
ஆப்பிள் - 1
தேன் - தேவைக்கு
புதினா - சிறிதளவு
ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

செய்முறை:

கிவிப் பழத்தின் தோலை எடுத்துவிட்டு மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.

ஆப்பிள் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி (தோல் எடுக்கவேண்டாம்) மிக்சியில் நைசாக அரைக்கவும்.

புதினா இலைகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள மூன்று ஜூஸ்களையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்சியில் போட்டு அதனுடன் தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறவும். குளுகுளுகிவி ஆப்பிள் புதினா ஜூஸ் ரெடி..

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com 

You'r reading உடலுக்கு குளிர்ச்சியை தரும் கிவி ஆப்பிள் புதினா ஜூஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 6 மணி படப்பிடிப்புக்கு 5 மணிக்கே வரும் முன்னணி நடிகர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்