நவராத்திரி ஸ்பெஷல்: உளுந்து பாயாசம்.

Navratri Special Urad dal payasam

நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று வெண் பாயாசம் செய்து அம்மனுக்கு படைத்து அவளின் அருளைப் பெறுங்கள்.

தேவையான பொருட்கள் :

உளுந்து - 150 கிராம்

பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பால் - 1 லிட்டர்

சீனி - 400 கிராம்

உப்பு - 1 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

முந்திரி, திராட்சை, பாதாம் - தேவைக்கு

செய்முறை :

முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உளுந்தையும், அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு அதில் உப்பு, தேங்காய் பால் சேர்க்கவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் அரைத்த உளுந்து, உப்பு, தேங்காய் பால் கலவையை ஊற்றவும்.

கெட்டியாக இருக்கும் அந்த கலவையில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி 20 நிமிடம் அடுப்பில் வைக்கவும். அடிபிடிக்காதவாறு கலவையை அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

சிறிது நேரம் கழித்து கெட்டியாகி உளுந்து வாசம் வீசும் போது சீனி, ஏலக்காய் தூளை சேர்த்து கிளறவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாமை போட்டு வறுத்து உளுந்து பாயசத்தில் சேர்க்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல் சுவையான உளுந்து பாயாசம் தயார்

You'r reading நவராத்திரி ஸ்பெஷல்: உளுந்து பாயாசம். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உங்கள் உடையை அலங்கரிக்க நீங்களே போடலாம் எம்பிராய்டரி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்