தீபாவளி ஸ்பெஷல் :இனிப்பான பிஸ்தா பர்ஃபி.

Diwali Special Pista burfi

சத்து இருக்கும் ஆனால் சுவை இருக்காது. சுவை இருக்கும் ஆனால் சத்து இருக்காது. ஆனால் சுவையும் சத்தும் நிறைந்த இந்த இனிப்பு பலகாரத்தை வரும் தீபாவளி அன்று செய்து சுவைத்திடுங்கள்.

தேவையானப் பொருட்கள்:

பிஸ்தா பருப்பு(உப்பில்லாதது)- 1 டம்ளர்

சர்க்கரை- 2 1/2 டம்ளர்

நெய்- 1/4 டம்ளர்

நீர்- 3/4 டம்ளர்

ஏலக்காய்த்தூள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

  1. ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  2. ஆற வைத்துப் பிஸ்தாவை மின்னரைப்பானில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
  3. சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
  4. பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
  5. ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தாம்பாளத்திற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.
  6. சுவையான பிஸ்தா பர்பி தயார்.

பின்குறிப்பு:

சர்க்கரைப்பாகு வைக்க விரும்பாதவர்கள் பிஸ்தாப்பருப்பு, சர்க்கரை ஒன்றாகக் கலந்து குறைந்த தீயில் அடுப்பை ஏற்றிக் கூடுதல் நேரமெடுத்தாலும் கெட்டியாகும் வரைப் பொறுமையாகச் செய்து வில்லைகள் செய்து கொள்ளலாம்.

You'r reading தீபாவளி ஸ்பெஷல் :இனிப்பான பிஸ்தா பர்ஃபி. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாத்டப்பில் குளிக்கும் போட்டோவை வெளியிட்ட ராதிகா ஆப்தே!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்