சிறுநீரகத்திற்கு சிறந்தது வாழைத்தண்டு மோர்

Vazhaithandu more recipe good for kidney

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் வாழைத்தண்டு மோர் குடித்தால் மிகவும் நல்லது. சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் இதை பருகலாம். நீர் எரிச்சல் நீங்கும். உடல் எடை குறையும். ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். வாரம் இருமுறை இதை பருகுங்கள்.சரி, நாம இப்போ வாழைத்தண்டு மோர் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு – 250 கிராம் (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
மோர் – 300 மி.லி
நறுக்கிய கொத்தமல்லி தழை– தேவைக்கேற்ப.

செய்முறை:

வெட்டிய வாழைத் தண்டை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.

மோரை கடைந்து அரைத்த வாழைத்தண்டு கலவையில் சேருங்கள்.

தேவைக்கு இந்துப்பு மற்றும் கொத்தமல்லி தழை கலந்து பருகவும்.

You'r reading சிறுநீரகத்திற்கு சிறந்தது வாழைத்தண்டு மோர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்க எளிய வழிமுறைகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்