சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய சாக்லேட் குக்கீஸ்

Chocolate cookies that are easy to do at home

குக்கீஸ் என்றால் யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய குக்கீஸை சுலபமாக வீட்டில் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாதாம் பவுடர்  -  1/4 கப்.

வெண்ணெய்  -  3 டீஸ்பூன்.

சாக்லெட் சிப்ஸ்  -  1 டீஸ்பூன்.

பொடித்த பிரவுன் சுகர்  -  2 டீஸ்பூன்.

பால்  -  1/4 கப்

வெனிலா எசென்ஸ்  -  1 டீஸ்பூன்.

உப்பு  -  1 சிட்டிகை.

செய்முறை:

ஒரு கனமான பாத்திரத்தில் வெண்ணெய், பிரவுன் சுகர், பால், வெனிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.

பிறகு அதில் பாதாம் பவுடர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கடைசியாக அதனுடன் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து குக்கீஸ்களாக தட்டி டிரேயில் அடுக்கி வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து பரிமாறவும்.

குழந்தைகளுக்கு பிடித்த சாக்லெட் குக்கீஸ் ரெடி.

குறிப்பு:

பாதாம் பவுடர் செய்ய பாதாமை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி, ஒரு இரவு முழுவதும் காயவிட்டு மிக்ஸியில் பவுடராக பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

You'r reading சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய சாக்லேட் குக்கீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எபோலா வைரஸிற்கு பலியானோர் எண்ணிக்கை 200 !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்