சுவையான சுறா புட்டு செய்ய ரெடியா ??

Tasty Sura puttu recipe

சுறா மீனைக்கொண்டு செய்யப்படும் இந்த ரெசிபி, மீன் உணவு வகைகளிலேயே தனி சுவை கொண்டது. மீன் சாப்பிட பிடிக்காதவர்களுக்கு கூட சுறா புட்டு மிகவும் பிடிக்கும். சரி, சுவையான சுறா புட்டு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சுறா – அரை கிலோ

சாம்பார் வெங்காயம் – 2௦௦ கிராம் (நற்கியது)

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

பூண்டு – ஒரு கையளவு (உரித்தது)

உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – நான்கு

சோம்பு – ஒரு டீஸ்பூன்

செய்முறை

சுறாவை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். சுறா வெந்ததும், ஆற வைத்து தோல், முள் நீக்கி உதிரி உதிரியாகய் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.

உதிர்த்த சுறாவை சேர்த்து கிளறி, போதுமான உப்பு சேர்க்கவும்.

சுறா ரொட்டித்துண்டு மாதிரி வெந்து உதிரி உதிரியாக முட்டை பொரியல்போல் வந்ததும், இறகிவிடயவும்.
அவ்ளோதாங்க, சுவையான சுறா புட்டு ரெடி !

You'r reading சுவையான சுறா புட்டு செய்ய ரெடியா ?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிக்கல் ஓவர் - என்னை நோக்கி பாயும் தோட்டா ரீலிசுக்கு ரெடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்