சட்டுனு செய்யலாம்.. இறால் ஃபிரை ரெசிபி

Easy cook Prawn fry recipe

அசைவ பிரியர்களே.. இன்னைக்கு நாம ரொம்ப ஈசியா சமைக்கக்கூடிய இறால் ஃபிரை எப்படி செய்றதுன்னு பார்க்கப்போறோம்..

தேவையான பொருட்கள்:

இறால் – 500 கிராம்
முட்டை – 1
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
சோளமாவு – 1 மேசைக்கரண்டி

செய்முறை:

இறாலை தோல் நீக்கி சுத்தமாகக் கழுவவும். அதை அதனுடன் மிளகுத்தூள், சோளமாவு , முட்டை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் ஊற வைத்த இறாலை ஒவ்வொன்றாக போட்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க ரொம்ப ஈசியாவும், சுவையாகவும் செய்யக்கூடிய இறால் சுவையான ஃபிரை ரெடி !

You'r reading சட்டுனு செய்யலாம்.. இறால் ஃபிரை ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேகதாதுவில் அணை ; நாளை கர்நாடக அதிகாரிகள் ஆய்வு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்