சுவையான சிக்கன் பெப்பர்65 ரெசிபி!

Chicken pepper 65 recipe

பொதுவா வீட்டுல நாம சிக்கன் 65 செய்வோம்.. சிக்கன் பெப்பர் 65 செஞ்சிருக்கீங்களா.. இன்னைக்கு நாம சிக்கன் பெப்பர் 65 எப்படி செய்றதுன்னு பார்க்கபோறோம்.

சிக்கன் பெப்பர் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள்:

மைதா                 - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு          - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு                 - 1 டேபிள் ஸ்பூன்
தயிர்                     -  ஒன்றரை டீ ஸ்பூன்
சிக்கன்                 - 1 கிலோ
சீரகம்                    - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு                    - 25 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்                - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்         - 5

செய்முறை:

முதலில் சீரகம், பச்சை மிளகாய், மிளகு, சோம்பு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மைதா, சோள மாவு, அரைத்து வைத்த விழுது ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போடவும். சிக்கன் நன்றாக வெந்து, பொன்னிறமாக மாறியதும் எடுத்து பரிமாறவும்.

அவ்ளோதாங்க சுவையான சிக்கன் பெப்பர் 65 ரெடி!

You'r reading சுவையான சிக்கன் பெப்பர்65 ரெசிபி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மு.க.ஸ்டாலினின் 'டைரி' குறிப்புகள் - ஒரு வார நிகழ்வுகளை 'பேஸ்புக்'கில் பதிவிட்டு 'அசத்தல்'!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்