இந்த அல்வா ரெசிபியை வீட்டுல ட்ரை பண்ணுங்க..

Pumpkin Halwa recipe

வீட்டுலயே சமைக்க கூடிய வெள்ளைப் பூசணி அல்வா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெள்ளைப் பூசணி - 1/4 கிலோ
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/2 கப்
ஏலப்பொடி - 1/4 ஸ்பூன்
முந்திரி - 10 பருப்பு

செய்முறை

முதலில் வெள்ளை பூசணிக்காயை பட்டை சீவி, வெள்ளைப் பாகத்தை துருவி ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். இதை போட்டு குக்கரில் சிறிது நேரம் வேகவைக்கவும்.

வெந்து மிருதுவாக இருக்கும் பூசணியை அ‌ப்படியே அடு‌ப்‌பி‌ல் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கரையுங்கள்.

பிறகு நெய்யைச் சேர்த்துக் கிளறி, கடைசியாக கலர் சேர்த்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி வையுங்கள்.

கடைசியாக ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி அல்லது நிலக்கடலைப் பருப்பு போட்டுக் கிறளவும்.

அவ்ளோதாங்க சுவையான பூசணி அல்வா ரெடி!

You'r reading இந்த அல்வா ரெசிபியை வீட்டுல ட்ரை பண்ணுங்க.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முன்னும் பின்னும் இரட்டை காமிராக்கள்: ஃபோவாய் ஒய்9 ஜனவரி 15ம் தேதி முதல் விற்பனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்