மழை வாசத்தில் சூடான வெங்காய பக்கோடா சாப்பிட வேண்டுமா??அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!!

how to make onion pakoda in tamil

இந்த பருவக் கால மழையானது சரியாக மாலை நேரத்தில் தான் அதிகமாக உள்ளது.மழையை ரசிக்கும் போது எல்லோரின் மனதிலும் சூடாக எதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்ற எண்ணம் தூண்ட ஆரம்பிக்கும்.அப்பொழுது சிலர் வீட்டில் சாப்பிட எந்த பொருளும் இருக்காது.கவலை வேண்டாம் மக்களே! இப்பொழுது கடையில் செய்கின்ற வெங்காய பக்கோடாவை நம் வீட்டிலும் செய்யலாம்.சரி வாங்க வெங்காயத்தை பயன்படுத்தி எப்படி சூடான பக்கோடா செய்வது என்பதை பார்க்கலாம்....

தேவையான பொருள்கள்:-

வெங்காயம்-1/4 கிலோ
அரிசி மாவு-50 கிராம்
பெருங்காயம்-1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
கொத்தமல்லி-சிறிதளவு
கடலை மாவு-100 கிராம்
எண்ணெய்-1/4 லிட்டர்
உப்பு-தேவையான அளவு

செய்முறை:-

தேவையான வெங்காயத்தை நீள வடிவத்தில் நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் வெங்காயம் சேர்த்து அதனுடன் கொத்தமல்லி இலை,மிளகாய் தூள்,பெருங்காயம்,கடலை மாவு,அரிசி மாவு,தேவையான அளவு உப்பு,ஒரு ஸ்பூன் எண்ணெய் ஆகியவை சேர்த்து கடைசியில் தேவைப்பட்டால் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

கலந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.எண்ணெய் சூடான பிறகு கலந்த கலவையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

கடைசியில் அலங்கரிக்க கொத்தமல்லியை தூவ வேண்டும்.சூடான,சுவையான வெங்காய பக்கோடா ரெடி..



You'r reading மழை வாசத்தில் சூடான வெங்காய பக்கோடா சாப்பிட வேண்டுமா??அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போதை மருந்து விவகாரத்தில் கைதான நடிகை மதம் மாறி மஹிரா ஆன டாக்குமென்ட்டால் பரபரப்பு.. உஷார் உஷார்.. ஹீரோக்களின் தடாலடிகள் மலையேறும் காலம் நெருங்குகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்