வெறும் பத்தே நிமிடத்தில் பன்னீர் பாயசம் ரெடி..ஆயுத பூஜைக்கு செய்து அசத்துங்க..

how to make paneer kheer recipe in tamil

பண்டிகை காலத்தில் இனிப்பு உணவாக பாயசம் கட்டாயமாக இடம்பெறும்.. இறைவனுக்கு படைக்க படும் உணவு இனிப்பில் இருந்து தான் தொடங்குவார்கள். பருப்பு பாயசம், பால் பாயசம் என்று பல வித பாயசம் செய்வார்கள். ஆனால் இந்த ஆயுத பூஜைக்கு பன்னீரில் பாயசம் செய்து குடும்பத்தாரை அசத்துங்கள்.. சரி வாங்க பன்னீர் பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-
பால் -1 லிட்டர்
பன்னீர்-1 கப்
அரிசி மாவு -1 ஸ்பூன்
ஏலக்காய் -6
சர்க்கரை -1/4 கப்
உலர்ந்த திராட்சை -தேவையான அளவு
குங்குமப்பூ -தேவையான அளவு
பாதாம் -5
பிஸ்தா -5

செய்முறை:-
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் பால் மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கிளற வேண்டும். கிளறும் பொழுது கட்டிகள் வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

10 நிமிடம் கழித்த பிறகு பால் கெட்டி ஆகி விடும்.பிறகு அதில் உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய், குங்குமப்பூ, தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்றாக கெட்டி பதத்தில் வந்த பிறகு நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு 3 நிமிடம் மிதமான தீயில் கிளறி விடவும்.. அடுத்து அடுப்பை அனைத்து பாயசத்தை ஒரு பௌலில் மாற்றி பாதாம், பிஸ்தா குங்கும பூ ஆகியவை கொண்டு அலங்கரித்தால் பன்னீர் பாயசம் தயார்..

You'r reading வெறும் பத்தே நிமிடத்தில் பன்னீர் பாயசம் ரெடி..ஆயுத பூஜைக்கு செய்து அசத்துங்க.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லண்டன் பயணத்தால் வந்த வினை... வெளுத்து வாங்கிய பிவி சிந்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்