மணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி ?? வாங்க சமைக்கலாம்..

how to make hotel style sambar in tamil

சிலருக்கு வீட்டில் செய்யும் சாம்பாரை சுத்தமாக பிடிக்காது. அதே ஹோட்டல் போனால் தோசைக்கும், இட்லிக்கும் சாம்பாரை ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். ஏனென்றால் ஹோட்டல் சாம்பார் சுவையாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதே போல் உங்கள் வீட்டில் யாராவது இருக்கிறார்களா?? சரி வாங்க சுவையான ஹோட்டல் சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-
துவரம்பருப்பு – 1/4 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
தக்காளி – 2
கேரட் – 1
கத்தரிக்காய் – 1
உருளைக் கிழங்கு – 1
பச்சை மிளகாய் – 8
புளி – தேவையான அளவு
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
கொத்தமல்லி இலை- சிறிதளவு
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க வேண்டிய பொருள்கள்:-
கடுகு - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு -தேவையான அளவு
சோம்பு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:-
முதலில் கத்திரிக்காய், கேரட், உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம் முதலியவற்றை சாம்பாருக்கு ஏற்றவாறு நறுக்கி கொள்ள வேண்டும். புலி கரைசல் கரைத்து வடி கட்டி கொள்ளவும். பாசி பருப்பு, துவரம் பருப்பு ஆகியவை அலசி கொண்டு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து அதில் அலசிய பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவை கொண்டு கொதிக்க விட வேண்டும்.

பிறகு கத்திரிக்காய்,கேரட்,உருளைக் கிழங்கு,தக்காளி,வெங்காயம்,கரைத்து வைத்த புலி கரைசல் ஆகியவை பருப்பில் சேர்த்து கொதிக்க விடவும்.காய் வெந்தவுடன் அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கபட்டுள்ள பொருள்களை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தாளித்த பொருளை சாம்பாரில் சேர்த்து கடைசியாக கொத்தமல்லி தூவி சாம்பாரை இறக்கி விட வேண்டும்.

You'r reading மணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி ?? வாங்க சமைக்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரம்யா பாண்டியன் ஆவேசம்.. குரூப்பிஸம் என்ற பெயரில் சூடாக்கிய ரியோ.. பரபரப்பாக வெளியான ப்ரோமோ.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்