சத்தும் சுவையும் சேர்ந்த ராகி சேமியா அடை செய்வோமா..

சத்தும் அதிகம்.. சுவையும் அதிகம்.. அப்புறம் என்ன யோசனை உடனே சமைத்துச் சாப்பிட வேண்டாமா!!

உணவு என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் இன்றியமையாதது ஆகும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கையாண்டால் நீண்ட நாள் வாழலாம். ராகியில் இயற்கையாகவே நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. கேரட் மற்றும் கோஸ் காய்கறிகளைப் பயன்படுத்தி சத்தான அடையைச் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-

ராகி சேமியா - 100 கிராம்,
நறுக்கிய கேரட்
கோஸ் - 1/2 கப்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பச்சரிசி - 100 கிராம்
துவரம்பருப்பு -50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 8.

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ராகி சேமியா, உப்பு, எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு 2 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து உதிரவைக்கவும்.

பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊறவைத்த பிறகு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவில் ராகி சேமியா, பெருங்காயத்தூள், காய்கறிகள், சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

கலந்த கலவையை அடை பதத்திற்குத் தட்டி கல் சூடான பிறகு போடவும். அதைச் சுற்றி எண்ணெய் விட்டு இரு பக்கமும் நன்றாக வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து ராகி சேமியா அடையைச் சூடாகப் பரிமாறி மகிழுங்கள்..இதற்கு வெங்காய சட்னி வைத்துச் சாப்பிட்டால் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்.

You'r reading சத்தும் சுவையும் சேர்ந்த ராகி சேமியா அடை செய்வோமா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லாட்வியா நாட்டு ராப் பாடகர் பாரதியார் பாடலுடன் தமிழ் என்ட்ரி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்