ராகியில் இப்படி இட்லி செய்து பாருங்க.. சூப்பரா இருக்கும்..!

ராகியில் சொடுக்கு போடும் நிமிடத்தில் பல வகையான உணவு வகைகளை சமைக்கலாம். ராகியில் ஆன உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாவில் கொஞ்ச நேரம் ராகியை ஊறவைத்தால் போதும்.. அதலில் இருந்து இட்லி, தோசை என இரண்டு வகையாக உணவை சீக்கிரமாக செய்து விடலாம். சரி வாங்க ராகியில் இட்லி செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
ராகி - 200 கிராம்
இட்லி மாவு- தேவையான அளவு
தயிர் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:-
முதலில் இட்லி மாவை தனியாக எடுத்து கொள்ளவும். அதலில் ராகி மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.

இந்த கலவையை ஒரு 20 நிமிடம் போல் ஊறவைக்கவும்.அப்பொழுது தான் ராகி மாவில் நன்றாக ஊறும். ஊறிய மாவை இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பத்தே நிமிடத்தில் சுவையான.. ஆரோக்கியமான ராகி இட்லி தயார்..

You'r reading ராகியில் இப்படி இட்லி செய்து பாருங்க.. சூப்பரா இருக்கும்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழக மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை.. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்