காரசாரமான சீரக இட்லி ரெசிபி..! எப்படி செய்வது?? வாங்க பார்க்கலாம்...

இட்லியில் சாம்பார் இட்லி, சில்லி இட்லி என பல வகை இட்லியை சாப்பிட்டு இருப்போம்.. ஆனால் சீரக இட்லியை கேள்விப்பட்டு இருப்பது அரிது தான்.. ஆனால் சீரக இட்லியை செய்ய அதிக பொருள் தேவையில்லை மட்டும் அதிக நேரமும் தேவையில்லை. பத்தே நிமிடத்தில் சீரக இட்லியை சமைத்து விடலாம்.சரி வாங்க எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
இட்லி மாவு- 1 கிலோ
சீரகம் - 100 கிராம்
காய்ந்தமிளகாய் - 10
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:-
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பச்சை நெடி போகும் வரை நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

பின்பு இந்த கலவையை ஆற வைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ளவும். அரைத்த பொடியை இட்லி மாவுடன் சேர்த்து கலக்கவும். கலந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.பத்தே நிமிடத்தில் சீரக இட்லி தயார்..

You'r reading காரசாரமான சீரக இட்லி ரெசிபி..! எப்படி செய்வது?? வாங்க பார்க்கலாம்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யாரடி நீ மோகினி சீரியலின் வில்லியான ஸ்வேதா திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்