கத்தரிக்காயில் இப்படி துவையல் செய்து பாருங்க.. அப்புறம் அசந்து போய்டுவிங்க..!

கத்தரிக்காயில் குழம்பு, பொரியல் என பல வித டிஷ் செய்யலாம். ஆனால் துவையல் இது வரை கேள்விபட்டு இருப்பது அரிது தான்.. சுவையான கத்தரிக்காய் துவையல் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு காணலாம்..

தேவையான பொருள்கள்:-
கத்தரிக்காய் - 1
தேங்காய் துருவல் -1 கப்
து. பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு -2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:-
முதலில் கத்தரிக்காயில் எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி தோலை உரித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், து. பருப்பு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

பிறகு மிக்சியில் துருவிய தேங்காய், கத்தரிக்காய் மற்றும் வறுத்து வைத்த கலவை ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

கடைசியில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளித்து அரைத்த துவையலில் சேர்த்தால் சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்.. இதனை இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்..

You'r reading கத்தரிக்காயில் இப்படி துவையல் செய்து பாருங்க.. அப்புறம் அசந்து போய்டுவிங்க..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஹானே வரலாறு படைக்க வாய்ப்பு!.. மைக்கேல் கிளார்க் கருத்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்