மந்த தன்மையை நீக்கும்.. எப்பவும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.. கொத்தமல்லி துவையல் ரெசிபி..!

கொத்தமல்லியை வாசனைக்காக கடைசியில் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக பிரியாணி போன்ற உணவுகளில் கொத்தமல்லி இல்லாமல் சமைக்கவே முடியாது. கொத்தமல்லியில் பல வித ஆரோக்கிய சத்துக்கள் உள்ளது. மந்த தன்மையை நீக்கி எப்பவும் சுறுசுறுப்பாக இருக்க கொத்தமல்லி பெரு பங்கு வகிக்கின்றது. சரி வாங்க கொத்தமல்லியில் எப்படி துவையல் செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
கொத்தமல்லி - 1 கப்
காய்ந்த மிளகாய் - 10
புளி - சிறிதளவு
உ. பருப்பு- 50 கிராம்
க.பருப்பு - 50 கிராம்
இஞ்சி - 1 துண்டு
வெல்லம் - 1 துண்டு
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:-
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு அதில் உ.பருப்பு, க. பருப்பு, காய்ந்த மிளகாய், புளி மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். மிக்சியில் கொத்தமல்லி இலையை மட்டும் அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

பிறகு வாணலியில் வறுத்த கலவையை தனியாக அரைத்து கொள்ளவும். பிறகு அரைத்த இரண்டு கலவையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான கொத்தமல்லி துவையல் ரெசிபி தயார்.. இதனை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..

You'r reading மந்த தன்மையை நீக்கும்.. எப்பவும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.. கொத்தமல்லி துவையல் ரெசிபி..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாரிக்கும் மரவள்ளி கிழங்கு தோசை செய்வது எப்படி??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்