ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான பன்னீர் தோசை ரெசிபி..!

பன்னீர் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெருகின்றது. வாரத்தில் இரண்டு முறை எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. பன்னீர் கிரேவி, பன்னீர் ப்ரை என பல வகைகளை பன்னீரில் சமைக்கலாம். இப்பொழுது ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் எப்படி பன்னீர் தோசை செய்வதை பற்றி பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
தோசை மாவு - 2 கப்
பன்னீர் - ஒரு கப்
எண்ணெய்-தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மசாலா பொருள்கள்:-
தனியா தூள்- 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா- 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள்- 2 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் தேவையான பன்னீரை துருவி அல்லது சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடான பிறகு அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

பிறகு பன்னீர், தனியா தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவை சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் ரெடி.

அடுப்பில் தோசை கல் சூடானதும் அரிசி மாவு ஊற்றி அதன் மேல் பன்னீர் கிரேவி வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றவும். பொன்னிறமாக மாறியவுடன் தோசையை ரோல் செய்வது போல் செய்தால் சுவையான பன்னீர் தோசை தயார்.

You'r reading ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான பன்னீர் தோசை ரெசிபி..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்