வெறும் பத்தே நிமிடத்தில் சத்தான காலை டிபன் செய்து அசத்துங்கள்..!

ஓட்ஸில் இயற்கையாகவே உடல் பருமனை குறைக்கும் தன்மை உள்ளதால் குண்டாக இருப்பவர்கள் காலை டிபனாக ஓட்ஸ்யை கஞ்சியாக எடுத்து கொள்வார்கள். தினமும் ஓட்ஸில் ஒவ்வொரு வகையான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் இதய நோய் போன்ற கொடிய நோய்கள் யாவும் தடம் தெரியாமல் அழிந்து விடும். சரி வாங்க நாம் இன்றைக்கு ஓட்ஸில் தோசை செய்வது எப்படி என்பதை பார்க்க போகிறோம்..

தேவையான பொருள்கள்:-
ஓட்ஸ்-1 கப்
அரிசி மாவு-1/4 கப்
தயிர்-1/2 கப்
மிளகு தூள்-1 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஓட்ஸ், அரிசி மாவு, தயிர், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும். கலந்த கலவையை ஒரு 30 நிமிடம் ஊற வைக்கவும். அப்பொழுது தான் ஓட்ஸ் மாவில் நன்றாக ஊறி தோசை சுவையாக வரும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் காய்ந்தவுடன் அதில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த மாவை ஊற்ற வேண்டும். பத்தே நிமிடத்தில் ஒரு சுவையான.. ஆரோக்கியமான… சிற்றுண்டி ரெடி.. இது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த காலை டிபன்.

You'r reading வெறும் பத்தே நிமிடத்தில் சத்தான காலை டிபன் செய்து அசத்துங்கள்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வி பி எப் கட்டணம்: கியூப் நிறுவன முற்றுகை போராட்டம் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்