பண்டிகை நாட்களில் சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி??

போளியை தென்னிந்தியாவில் ஹொலிகே என்று கூறுவார்கள். அங்கு நடைபெறும் பண்டிகைகளில் இந்த இனிப்பான உணவு கண்டிப்பாக இடம்பெறுமாம். சர்க்கரையில் செய்வதால் இதனை சர்க்கரை போளி எனவும் வழங்குவர். இதனின் சிறப்பம்சம் என்னவென்றால் 15 நாட்களுக்கு கூட போளியை எடுத்து வைத்து சாப்பிடலாம். கடைகளில் செய்வது போல வீட்டில் இனிப்பான போளி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-
மைதா மாவு-3/4 கப்
ரவை மாவு-2 கப்
எண்ணெய்-1/2 கப்
நெய்-1/4 கப்
தண்ணீர்-தேவையான அளவு
ஏலக்காய் தூள்-தேவையான அளவு
சர்க்கரை-1கப்
தேங்காய்-1கப்

செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் அதனுடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு செய்வது போல பிசைந்து கொள்ளவேண்டும். பிறகு அதனை 2 முதல் 3 மணி நேரம் ஒரு துணியினால் மூடி வைக்க வேண்டும். ஓரு கிண்ணத்தில் அரைத்த தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.

முன் பிசைந்து வைத்த மாவினை உருண்டையாக உருட்டி எடுத்து அதன் நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து தட்டையாக தேய்த்து கொள்ள வேண்டும். மாவினில் இரண்டு பக்கமும் எண்ணெய் தடவவும்.

பிறகு, அடுப்பில் தவாவை மிதமான சூட்டில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை வேக வைக்கவும். கடைசியில் சிறிது நெய் சேர்த்து சூடாக பறிமாறுங்கள். சூடான, சுவையான, இனிப்பான, தேங்காய் சர்க்கரை போளி ரெடி..

You'r reading பண்டிகை நாட்களில் சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சேலத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 4 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டிகள் ஆந்திராவில் பறிமுதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்