குழந்தைகள் ஸ்பெஷல்..! செம கிரிஸ்பியான உருளை கிழங்கு வறுவல்..

குழந்தைகளுக்கு மற்ற காய்கறிகளை விட உருளைக்கிழங்கு என்றால் தனி பிரியம் உண்டு. உருளைக்கிழங்கை எப்படி செய்தலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் வறுவல்னா சொல்லவா வேண்டும். சரி வாங்க உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-
உருளை கிழங்கு -1/4 கிலோ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - 1 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:-
முதலில் உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும். காய்கறிகளில் உள்ள அழுக்கை எடுக்க வெந்நீரில் போட்டு உடனே எடுத்து விட வேண்டும். அதுபோல உருளைக்கிழங்கை போட்டு எடுத்து விட வேண்டும்.

பிறகு அதில் சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு மற்றும் லேசாக தண்ணீர் விட்டு பிசைந்து கொண்டு ஒரு அரை மணி நேரம் ஊறவைக்கும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடான பிறகு பிசைந்து வைத்த உருளை கிழங்கை சேர்த்து பொறித்து கொள்ளவும். சுவையான உருளை கிழங்கு வறுவல் தயார்.

You'r reading குழந்தைகள் ஸ்பெஷல்..! செம கிரிஸ்பியான உருளை கிழங்கு வறுவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை இப்படி செய்து பாருங்கள்.. சுவை அடி தூள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்