உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பருப்பு துவையல் செய்வது எப்படி??

காய்ச்சல் வந்தால் எதுவுமே சாப்பிட பிடிக்காது. அதுவும் நாக்கு கசப்பாக இருக்கும் பொழுது தண்ணீர் கூட குடிக்க முடியாது. இந்த சமயத்தில் ஏதாவது சுவையாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் பருப்பு துவையலை உண்ணுங்கள். இது நாக்கில் உள்ள கசப்பு தன்மையை எடுத்துவிடும். சரி வாங்க பருப்பு துவையலை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-
துவரம் பருப்பு -3 கரண்டி
கடலைப்பருப்பு -2 கரண்டி
வற்றல் மிளகாய் -2
உப்பு -தேவையான அளவு
தேங்காய் துருவல் -சிறிதளவு

செய்முறை:-
முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் துவரம் பருப்பு, கடலை பருப்பு, வற்றல் மிளகாய், தேங்காய் துருவல் போன்றவையை தனித்தனியாக வறுத்து கொள்ள வேண்டும்.

வறுத்த கலவையை காற்றில் ஆற விட வேண்டும். மிக்சியில் உப்பு, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

You'r reading உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பருப்பு துவையல் செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா தடுப்பு மருந்து மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்