சுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி??

விசேஷ காலத்தில் இனிப்பான பாயசத்தை இறைவனுக்கு வழிபாடு செய்வது வழக்கம். சேமியா பால் பாயசத்தை விட பாசி பருப்பு பாயசத்தை தான் அனைவரும் விரும்புவார்கள். சரி வாங்க சுவையான பாயசத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-
பாசி பருப்பு-1 கப்
வெல்லம்-1 கப்
நெய்-2 ஸ்பூன்
தேங்காய் பால்-1 கப்
முந்திரி-10-12
உலர்ந்த திராட்சை-2 ஸ்பூன்
ஏலக்காய்-4

செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய் ஊற்ற வேண்டும். நெய் சூடானதும் அதில் முந்திரி, திராட்சை, மற்றும் பாசி பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும். வறுத்த பருப்பில் 1 கப் தேங்காய் பாலை ஊற்றி பிறகு ஏலக்காய் சேர்த்து 15 நிமிடம் பருப்பு வேகும் வரை மூடி வைக்கவும்.

பருப்பு நன்கு வெந்த பின் அதில் 1 கப் வெல்லம் சேர்த்து கிளறி விட வேண்டும். கடைசியில் தேவையான அளவு தேங்காய் பால் சேர்த்து கிளறினால் சுவையான பாசி பருப்பு பாயசம் தயார். தேவைப்பட்டால் வாசனைக்கு ஒரு ஸ்பூன் நெய் உற்றலாம்.

You'r reading சுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பப்பாளி சாப்பிட்டால் முகம் வெள்ளை ஆகுமா?? புதிய தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்