புளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு கீரை சுத்தமாக பிடிக்காது. கீரை என்றாலே சாப்பிட தயங்குவார்கள். ஆனால் கீரையில் பலவகை சத்து உள்ளது. குழந்தைகளுக்கு கீரையில் உள்ள சத்து கிடைக்க வேண்டும் என்றால் கீரையை இப்படி செய்து கொடுங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க கீரை தயிர் கூட்டு செய்வது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:-
முளைக்கீரை -1 கப்
உப்பு -தேவையான அளவு
காய்ந்த மிளகாய் -4
சீரகம் -1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் -1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 ஸ்பூன்
தயிர் -1/2 கப்
எண்ணெய் -1 ஸ்பூன்
கடுகு -1/4 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் கீரையை ஆய்ந்து நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். பிறகு காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் போன்றவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த கலவையை வேக வைத்த கீரையில் சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போன்றவை தாளித்து கீரையில் சேர்க்கவும். கடைசியில் தயிர் சேர்த்தால் சுவையான கீரை தயிர் கூட்டு தயார்.

You'r reading புளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பப்பாளி சாலட்..! வெயிலுக்கு இதமான ஃப்ரூட்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்