தேர்தலில் ஒத்துழையாமை இயக்கம்... மாவட்ட தலைவர்களை முன்வைத்து ஸ்டாலினுக்கு செக் வைக்கும் திருநாவுக்கரசர்!

Thirunavukkarasars Non Cooperation Movement against MK Stalin

மதச்சார்பற்ற கொள்கையில் மூப்பனார் வழியைக் கடைபிடித்து வருகிறோம். தி.மு.க கூட்டணியில் தொடர்வதைத்தான் விரும்புகிறோம். வரும் தேர்தலில் புதிய கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும். தி.மு.க தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அண்ணா தி.மு.க, தி.மு.க, தினகரன், கமல்ஹாசன் ஆகியோரும் த.மா.காவை விரும்புகிறார்கள்.

திருநாவுக்கரசரைத் தூக்கிவிட்டு கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டதில் திமுகவின் பங்கு அதிகம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கொதிக்கின்றனர்.

இந்தக் கோபத்தை நாடாளுமன்றத் தேர்தலில் காட்ட இருக்கிறார்கள். இதைப் பற்றிப் பேசும் காங்கிரஸ் புள்ளிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காலகட்டத்தில் 25 மாவட்டங்களுக்குத் தலைவர் பதவியை நிரப்பினார் திருநாவுக்கரசர்.

அவர்கள் அனைவரும் திருநாவால் பதவிக்குக் கொண்டு வரப்பட்டவர்கள். இன்றளவும் திருநாவுக்கரசர் சொல்வதைத்தான் கேட்பார்கள்.

தொகுதிப் பங்கீடு, பேச்சுவார்த்தை என எது நடந்தாலும் களத்தில் நின்று வேலை பார்க்கப் போவது அவர்கள்தான். திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக எந்த வேலையையும் செய்யாமல் அமைதியாக இருக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

தன்னுடைய செல்வாக்கைக் காட்டுவதற்காக 25 மாவட்டத் தலைவர்களையும் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார் திருநாவுக்கரசர். ஸ்டாலினுக்கு செக் வைக்கும் முயற்சியும் இதில் அடங்கியிருக்கிறது' என்கின்றனர்.

-அருள் திலீபன்

You'r reading தேர்தலில் ஒத்துழையாமை இயக்கம்... மாவட்ட தலைவர்களை முன்வைத்து ஸ்டாலினுக்கு செக் வைக்கும் திருநாவுக்கரசர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'நல்லதம்பியான சின்னத்தம்பி யானை' - செய்வதறியாமல் தவிக்கும் வனத்துறை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்